💢ஓட்டுனர் தொழில் என்பது மிக மிக மிக இன்றியமையாத ஒரு தொழிலாகும். 💢காரணம், பயணங்கள் இல்லாமல் எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையும் இருக்காது. 💢பயணங்களின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது,கீழ்க்கண்ட சில முக்கியமான குணங்களை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். 💢அவையாவன, 1).பொறுமை, 2).நிதானம், 3).சகிப்புத்தன்மை, 4).விழிப்புணர்வு, 5).அனுசரிப்பு, 6).விட்டுக் கொடுத்தல், 7).கோபம் கொள்ளாமை, 8).துணிச்சல், 9).மனோதிடம், 10).சமயோஜித புத்தி, 11).சுறுசுறுப்பு, 12).இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சாதுரியமாகக் கையாளும் திறன் போன்றவைகள் ஆகும். 💢டிரைவர்கள் இந்த அனைத்து படி நிலைகளையும் அனுபவங்களாகப் பெற்றிருத்தல் வேண்டும். 💢விழிப்புணர்வுடன் கூடிய சாலைப் பயணங்களை உருவாக்கிடுவோம். 💢பொதுநலம் கருதி வெளியிடுவது, தளபதி பிரபாகரன்.கு In English 👇 💢Driving profession is a very, very essential profession.Because no human life would exist without travel. 💢Drivers who can be the backbone of the journeys must adhere to certain important qualities...
பகுதி - 2 : விபத்தில்லா பயணம் தொடர சில அணுகுமுறைகள் (Some approaches to maintain an accident-free journey). Posted By, Thalapathi Prabhakaran K
💢வாகனங்கள் ஓட்டும் போது கண்டிப்பாக தொலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது. அப்படி அவசரம் என்றால், வாகனத்தை உடனடியாக இடது புறம் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடமாகப் பார்த்து நிறுத்திவிட்டுப் பிறகு பேச வேண்டும். 💢கார்களில் பொதுவாக மூன்று மிரர்கள் இருக்கும். அவையாவன, 1). சென்டர் மிரர், 2). ரைட் சைடு மிரர், 3). லெப்ட் சைடு மிரர். 💢ஓட்டுநர்கள் இந்த மூன்று மிரர்களையும் அடிக்கடி பார்த்துப் பார்த்து வாகனத்தை ஓட்ட வேண்டும். 💢 இதை ஃபாலோ செய்தால் தான் நமக்குப் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் வரக்கூடிய வாகனங்களின் மீது நம்முடைய வாகனம் எந்த உராய்வும் அல்லது பெரிய அளவு மோதலும் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டு நல்லபடியாகத் தொடர முடியும். 💢மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம். 💢இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி, - தளபதி பிரபாகரன்.கு 💢Mobile phones should not be used while driving. 💢 If there is such an emergency, the vehicle should be parked immediately on the left side where no one will be disturbed and then talk. 💢Cars us...