Skip to main content

பகுதி - 2 : விபத்தில்லா பயணம் தொடர சில அணுகுமுறைகள் (Some approaches to maintain an accident-free journey). Posted By, Thalapathi Prabhakaran K

💢வாகனங்கள் ஓட்டும் போது கண்டிப்பாக தொலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது. அப்படி அவசரம் என்றால், வாகனத்தை உடனடியாக இடது புறம் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடமாகப் பார்த்து நிறுத்திவிட்டுப் பிறகு பேச வேண்டும்.

💢கார்களில் பொதுவாக மூன்று மிரர்கள் இருக்கும். அவையாவன,

1). சென்டர் மிரர்,

2). ரைட் சைடு மிரர்,

3). லெப்ட் சைடு      மிரர். 

💢ஓட்டுநர்கள் இந்த மூன்று மிரர்களையும் அடிக்கடி பார்த்துப் பார்த்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

💢 இதை ஃபாலோ செய்தால் தான் நமக்குப் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் வரக்கூடிய வாகனங்களின் மீது நம்முடைய வாகனம் எந்த உராய்வும் அல்லது பெரிய அளவு மோதலும் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டு நல்லபடியாகத் தொடர முடியும்.

💢மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம். 

💢இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி,

- தளபதி பிரபாகரன்.கு

💢Mobile phones should not be used while driving. 

💢 If there is such an emergency, the vehicle should be parked immediately on the left side where no one will be disturbed and then talk. 

💢Cars usually have three mirrors. They are, 

1). Center Mirror, 

2). Right Side Mirror,

3). Left side mirror. 

💢Drivers should check these three mirrors frequently while driving. 

💢By following this, our vehicle can continue its journey smoothly without any friction or major collision with the vehicles that may come behind us and on the sides.

💢Let's follow the above steps. Let's have an accident-free trip. 

💢Thus, in the public interest of road safety,

- Thalapathi Prabhakaran.K 

Comments

Popular posts from this blog

பகுதி - 1 : கார் ஓட்டும்போது விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி ? How to avoid accidents while driving ? Posted By, Thalapathi Prabhakaran K

பெரும்பாலான சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கத் தவறுவதால் தான் ஏற்படுகிறது. எனவே கார் ஓட்ட ஆசைப்படுபவர்கள் முதலில் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு ஆராய்ந்து படித்துப் புரிந்து வைத்துக் கொண்டு அதைக் கடைபிடிக்க வேண்டும்.  உதாரணமாக,  1). டிரைவிங் நன்கு பயிலாமல், முறைப்படி லைசென்ஸ் எடுக்காமல் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது.  2). கட்டாயம் சீட் பெல்ட் அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். 3). வாகனங்களை அதன் தன்மை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப இயக்குதல் வேண்டும். 4). கட்டாயம் டிராபிக் சிக்னல்களை மதித்து நடத்தல் வேண்டும். டிராபிக் சிக்னல்களை பார்த்து அலட்சியம் செய்தல் கூடாது. 5). கண்டிப்பாக அதிவேகப் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடாது. 6). குறிப்பிட்ட மிதமான, குறைந்த வேகத்தில் மட்டும் தான் வாகனங்களை எப்போதும் இயக்குதல் வேண்டும். 7). விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ள முதலில் சாலை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கப் பழகுதல் வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணங்களை உருவாக்கிடுவோம். 💢 இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி...